சென்னையில் மத்திய அரசு நிறுவனம் என போலி ஆவணங்களை காண்பித்து பருப்பு வியாபாரியிடம் 3 கோடியே 65 லட்ச ரூபாய் மோசடி செய்த நபர் கைது.!
சென்னை தண்டையார்பேட்டையில் மத்திய அரசு நிறுவனம் என போலி ஆவணங்களை காண்பித்து பருப்பு வியாபாரியிடம் 3 கோடியே 65 லட்ச ரூபாய் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
பருப்பு வியாபாரி பாலாஜி என்பவருடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்ட பாண்டியராஜன், உமா உள்ளிட்ட 5 பேர் மத்திய அரசின் அனுமதி பெற்ற கிசான் ரேசன் ஷாப் மூலம் விவசாயிகள், வியாபாரிகளிடம் தானிய வகைகளை மொத்தமாக கொள்முதல் செய்து சில்லரை விற்பனை செய்யவதாக கூறியதாகவும், பாலாஜியிடம் 3 கோடியே 65 லட்ச ரூபாய் மதிப்பில் பயறு வகைகளை வங்கிக் கொண்டு பணம் தராமல் ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாலாஜி அளித்த புகாரில் பாண்டியராஜன் கைது செய்யப்பட்ட நிலையில், 4 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.
Comments