ஈரோட்டில் எண்ணெய் கிடங்கு விபத்தில் வடமாநில தொழிலாளி உயிரிழப்பு.. உரிய இழப்பீடு வழங்க கோரி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதில் 7 போலீசார் காயம்.!
ஈரோடு அருகே தனியார் எண்ணெய் கிடங்கு விபத்தில் உயிரிழந்த வடமாநில தொழிலாளிக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதில், காவல் ஆய்வாளர் உட்பட 7 போலீசார் காயமடைந்தனர்.
நஞ்சை ஊத்துக்குளியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் கிடங்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதற்கிடையில், விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி போராட்டம் நடைபெற்றதால், வடமாநில தொழிலாளர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசாருக்கும், தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி தொழிலாளர்கள் தாக்கியதில், காவல் ஆய்வாளர் உட்பட 7 பேர் காயமடைந்தனர். அங்கு 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 20க்கும் மேற்பட்டோரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு அருகே தனியார் எண்ணெய் கிடங்கு விபத்தில் உயிரிழந்த வடமாநில தொழிலாளிக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதில், காவல் ஆய்வாளர் உட்பட 7 போலீசார் காயமடைந்தனர்.
Comments