ரூ.1000 கோடி கலெக்சன்... பழைய வசூல் சாதனைகளை அடித்து நொறுக்கிய RRR..! சக்சஸ் மீட்டில் அதிகாரபூர்வ அறிவிப்பு

0 9318
ரூ.1000 கோடி கலெக்சன் பழைய வசூல் சாதனைகளை அடித்து நொறுக்கிய RRR..! சக்சஸ் மீட்டில் அதிகாரபூர்வ அறிவிப்பு

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் அண்மையில் வெளியாகி உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'டிரிபிள் ஆர்' பன்மொழித் திரைப்படம் 1000 கோடி ரூபாயைத் தாண்டி வசூலித்து இருப்பதாக 'சக்ஸஸ் மீட்'டில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்திய திரை உலகை தனது வசூல் சாதனைகளால் புரட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றது எஸ்.எஸ்.ராமவுலியின் டிரிபிள் ஆர் திரைப்படம்..!

ஜுனியர் என்.டி.ஆர், ராம்சரன் நடிப்பில் தெலுங்கு, தமிழ். இந்தி , மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகி அனைத்து மொழி ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது.

பாகுபலி அளவிற்கு இல்லை என்று சொன்னவர்களின் எதிர்மறையான விமர்சனங்களை தனது படத்தின் மகத்தான வசூல் சாதனையால் முறியடித்துள்ளார் எஸ்.எஸ்.ராஜமவுலி

எப்போது பன்மொழிகளில் வெளியாகும் படங்கள் அந்த நாயகர்கள் சார்ந்த மொழியில் மட்டுமே பிரமாண்ட வசூலை பெறும், ஆனால் டிரிபிள் ஆர் படத்தை பொறுத்தவரை டோலிவுட், பாலிவுட், ஹோலிவுட், சாண்டல் வுட், மல்லுவுட் என அனைத்து மொழிகளிலும் பழைய பன் மொழிப்படங்களின் வசூல் சாதனைகளை அடித்து நொறுக்கி வசூலை வாரி குவித்துள்ளது

படம் வெளியான முதல் 4 நாட்களில் 500 கோடி வசூலை தாண்டிய டிரிபிள் ஆர் படம் 13 நாட்களில் 1000 கோடி வசூல் சாதனையை படைத்திருக்கின்றது. இதனை சக்ஸஸ் மீட் வைத்து உலகிற்கு உரக்க சொல்லி இருக்கின்றார் படத்தின் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி..!

கடந்த முறை 1000 கோடி ரூபாய் வசூலை அள்ளிய பாகுபலி படத்தின் மூலம் பிரபாஸை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றது, போல இந்த படத்தின் மூலம் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரன் ஆகியோருக்கு இந்திய அளவிலான மார்க்கெட்டை உருவாக்கி கொடுத்துள்ளார் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி என்று திரை உலகினர் வியந்து புகழ்ந்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments