கோத்தபயா ராஜபக்சே ராஜினாமா செய்ய மாட்டார் -இலங்கை அரசு

0 2191

இலங்கை அதிபர் ராஜினாமா செய்ய போராட்டங்கள் வலுத்த போதும் கோத்தபயா ராஜபக்சே ராஜினாமா செய்ய மாட்டார் என்றும் எத்தகைய சூழ்நிலையையும் சந்திக்கத் தயார் என்றும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதார நிலைமை கடுமையாக சரிந்ததையடுத்து அவசர நிலையைப் பிரகடனப்படுத்திய கோத்தபயா ராஜபக்சே பின்னர் அதனை விலக்கிக் கொண்டார். அவருடைய அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்து கூட்டணிக் கட்சிகளும் விலகியதால் கோத்தபயா அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டது.

இந்நிலையில் கோத்தபயா ராஜினாமா செய்ய வலியுறுத்தி மக்கள் பெரும் திரளாக திரண்டு அவருடைய வீட்டையும் நாடாளுமன்றத்தையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். சுமார் இரண்டே கால் கோடி மக்கள் தொகை கொண்ட நாடான இலங்கை சீனா விரித்த கடன் வலையில் சிக்கிக் கொண்டு விட்டதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்போதைய சூழலில் இலங்கைக்கு பொருளாதார உதவிகளை வழங்காமல் சீனா பாராமுகமாக இருப்பதால் இலங்கையில் விலை வாசி கடுமையாக உயர்ந்து வருகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments