உணவக உரிமையாளரை கடப்பாரையால் அடித்துக் கொன்ற நபர் காவல் நிலையத்தில் சரண்

0 1831
உணவக உரிமையாளரை கடப்பாரையால் அடித்துக் கொன்ற நபர் காவல் நிலையத்தில் சரண்

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே மது போதையில் உணவக உரிமையாளரை கடப்பாரையால் அடித்துக் கொன்ற நபர் போலீசில் சரணடைந்தான்.

அண்டக்குடி கிராமத்தில் அசோக் என்பவர் சாலையோரமாக உணவகம் நடத்தி வந்தார். காரைக்காலைச் சேர்ந்த அன்பழகன் என்பவன் அதே பகுதியிலுள்ள நிறுவனம் ஒன்றில் காவலாளியாகப் பணியாற்றி வந்தான்.

அன்பழகன் அவ்வப்போது மது குடித்துவிட்டு வந்து அசோக்கின் உணவகம் அருகேயுள்ள இடத்தில் சிறுநீர் கழிப்பதும் அதனை அசோக் தட்டிக்கேட்கும்போது இருவருக்கும் தகராறு ஏற்படுவதும் வழக்கம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் புதன்கிழமை மதியம் அசோக் தனது வீட்டு வேலை செய்வதற்காக கடப்பாரையை எடுத்துச் சென்றபோது அவரது கையில் இருந்து அதனைப் பிடுங்கி அன்பழகன் அசோக்கின் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது.

இதில் சம்பவம் இடத்திலேயே அசோக் உயிரிழந்தார். ஊர்மக்கள் ஒன்றுகூடுவதைப் பார்த்த அன்பழகன், அவர்களிடமிருந்து தப்பித்து ஓடி காவல் நிலையத்தில் சரணடைந்தான்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments