எக்ஸ்.இ வகைத் தொற்று இந்தியாவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.. அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

0 2696
எக்ஸ்.இ வகைத் தொற்று இந்தியாவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.. அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

ஒமைக்ரானின் புதிய வகை துணை திரிபான  வகைத் தொற்று இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒமைக்ரானை விட இது வேகமாக பரவக்கூடியது என்றாலும் இதுவரை லண்டனில் 600 நபர்களுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

தமிழ்நாட்டில் இதுவரை டெல்டா, ஒமைக்ரானை தவிர புதிய எக்ஸ்.இ வைரஸ்  பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று  கூறினார்.

விமான நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments