அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவன் வீடியோ.. ஹிஜாப் விவகாரத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பிய மாணவிக்கு பாராட்டு
கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்திற்கு ஆதரவாக ஆவேசமாக குரல் எழுப்பிய கல்லூரி மாணவியை பாராட்டி அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவன் அய்மான் அல் ஜவாகிரி வீடியோ வெளியிட்டு இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கர்நாடக மாநில அமைச்சர் நாகேஷ், நாட்டில் அமைதியை சீர்குலைக்கவும், மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தவும் பயங்கரவாதிகள் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துவதாக தெரிவித்தார்.ஆனால் அவர்களால் ஒரு போதும் வெற்றி பெற முடியாது என்று குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சகம் கண்காணித்து வருவதாகவும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் நாகேஷ் தெரிவித்தார்.
Comments