கழிவுநீர் கால்வாய்கள் கவனிக்கப்படாமலோ அல்லது மூடி சேதமடைந்திருந்தாலோ மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

0 1359
கழிவுநீர் கால்வாய்கள் கவனிக்கப்படாமலோ அல்லது மூடி சேதமடைந்திருந்தாலோ மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

கழிவுநீர் கால்வாய்கள் கவனிக்கப்படாமலோ அல்லது மூடி சேதமடைந்திருந்தாலோ, அதை உடனடியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது உயர் நீதிமன்றத்தின் எல்லைச் சுவர்களை இயற்கை உபாதைகளை கழிக்க பயன்படுத்துவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு கூடுதல் வழக்கறிஞர் தெரிவித்தார்.

அப்பகுதியை அழகுபடுத்தும் வகையில் பூந்தொட்டிகள் வைக்கப்பட்டு, சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருவதாக விளக்கம் அளித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments