ரஷ்ய நாட்டு தூதரகத்தின் மீது காரை மோதிய நபர்.. தீப்பிடித்து எரிந்த காரில் இருந்த நபர் உயிரிழப்பு

0 1443
ரஷ்ய நாட்டு தூதரகத்தின் மீது காரை மோதிய நபர்.. தீப்பிடித்து எரிந்த காரில் இருந்த நபர் உயிரிழப்பு

ருமேனியாவில் உள்ள ரஷ்ய நாட்டு தூதரகத்தின் மீது காரை மோதிய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை கண்டிக்கும் விதமாக ஐரோப்பாவில் உள்ள ரஷ்ய தூதரகங்கள் மீது அடிக்கடி தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

ருமேனிய தலைநலர் புக்காரெஸ்ட்டில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் கதவு மீது அதிகாலை ஒருவர் காரை வேகமாக மோதினார்.

வாயில் கதவில் சொருகிய அந்த கார் தீப்பற்றி எரியத் தொடங்கியது. தீயணைப்புத்துறையினர் தீயை அணைப்பதற்குள் முன்பகுதி முழுவதும் எரிந்ததில் ஓட்டுநர் உடல் கருகி உயிரிழந்தார்.

இது திட்டமிட்டு நடத்தப்பட்டதா அல்லது தற்செயலாக நடந்த விபத்தா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments