உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் படிப்பை நிறைவு செய்ய ருமேனியா, ஹங்கேரி, போலந்து, கஜகஸ்தான் அரசுகளுடன் பேச்சுவார்த்தை
உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் படிப்பை நிறைவு செய்ய ருமேனியா, ஹங்கேரி, போலந்து, கஜகஸ்தான் அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவையில் பேசிய அவர், உக்ரைனில் இருந்து வந்த இந்திய மருத்துவ மாணவர்களுக்கு உக்ரைன் அரசு சிறப்பு சலுகை வழங்கியதாகவும் மூன்றாம் ஆண்டில் இருந்து நான்காம் ஆண்டு செல்லும் மாணவர்களுக்கு தளர்வு அளிக்க உக்ரைன் அரசு முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.
உக்ரைன் மாணவர்களுக்கு அவர்கள் வழங்கும் கல்விக் கடன்களில், உக்ரைன் நெருக்கடியின் தாக்கத்தை மதிப்பிடுமாறு வங்கிகளை நிதி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், கீவ்-வில் உள்ள பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக்கழகங்கள் படிப்புகளை ஆன்லைன் முறைக்கு மாற்ற மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
Comments