இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5% ஆக இருக்கும் - ஆசிய வளர்ச்சி வங்கி
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த நிதியாண்டில் ஏழரை விழுக்காடாக இருக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது.
உட்கட்டமைப்புத் திட்டங்களில் பொது முதலீடும், தனியார் முதலீடும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.
நாடு முழுவதும் பெருமளவில் தடுப்பூசி இயக்கத்தைச் செயல்படுத்தியதால் நீடித்த பொருளாதார மீட்சியின் பாதையில் இந்தியா சென்றுகொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
போக்குவரத்து உட்கட்டமைப்பு, உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டங்கள், உழவர்களின் வருமானத்தை உயர்த்த வழிவகை செய்தது ஆகிய அரசின் கொள்கைகள் பொருளாதார மீட்சிக்குத் தூண்டுதலாக அமைந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
Comments