போரில் உயிரிழந்த உக்ரைனியர்கள் நினைவாக நூற்றுக்கணக்கான மெழுகுவர்த்திகள் ஏற்றி அஞ்சலி
ரஷ்ய படைகளின் தாக்குதலில் உயிரிழந்த உக்ரைனியர்களின் நினைவாக லிவிவ் நகரில் நேற்றிரவு பொதுமக்கள் கூடி மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்து அஞ்சலி செலுத்தினர்.
உக்ரைன் தேசியக்கொடியில் இடம்பெற்றுள்ள மஞ்சள் மற்றும் நீல நிற பாட்டில்களுக்குள், மெழுகுவர்த்தியை ஏற்றி அந்நாட்டின் வரைபடத்தின் வடிவில் வைத்து அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
கீவ்வின் புறநகர் பகுதிகளில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறி கிழக்கு பகுதிகளுக்கு நகரும் வரை அங்குள்ள புச்சா நகரம் தான் கொடூர தாக்குதல்களை எதிர்கொண்டிருக்கிறது.
இதனிடையே, ரஷ்ய படைகள் வேண்டுமென்றே பொதுமக்களை கொன்றிருப்பதாக லிவிவ் நகர மேயர் குற்றம்சாட்டியுள்ளார். அந்த குற்றச்சாட்டை ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.
Comments