இந்தியாவில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்
ஒமைக்ரான் வைரசின் புதிய வகை துணை திரிபான எக்ஸ்.இ வகைத் தொற்று மும்பையில் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது.
எக்ஸ்இ வகை தொற்றால் பாதிக்கப்பட்டவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுவதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. முதன் முதலில் எக்ஸ்இ வைரஸ் பிரிட்டனில் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து தாய்லாந்து, நியூசிலாந்திலும் எக்ஸ்இ வகை தொற்று கண்டறியப்பட்டது. முதல் கட்ட ஆய்வின்படி, எக்ஸ்இ வைரஸ் ஒமைக்ரானை விட 10 சதவீதம் அதிகமாக தொற்றும் தன்மை கொண்டது என்பது தெரியவந்துள்ளது.
ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியின் தன்மைக்கு ஏற்ப இந்த வைரசின் தாக்கம் இருக்கும் என்றும், சிலருக்கு காய்ச்சல், இருமல் போன்ற லேசான அறிகுறிகளும் சிலருக்கு தீவிரமாக இதய நோய், நரம்பு நோய்களையும் ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments