ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நூதன முறையில் கடத்த முயற்சி.. ரூ.10 கோடி மதிப்புள்ள 50 கிலோ போதை மருந்து பறிமுதல்

0 2515
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நூதன முறையில் கடத்த முயற்சி.. ரூ.10 கோடி மதிப்புள்ள 50 கிலோ போதை மருந்து பறிமுதல்

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நூதன முறையில் கடத்தப்படவிருந்த சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 50 கிலோ போதை மருந்தை சென்னை விமான நிலைய சரக்ககத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

காட்டன் சட்டைகளின் மடிப்பு கலையாமல் இருப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் அட்டை பகுதிகளில் போதைப் பொருட்களை மறைத்து கடத்த முயன்றது அதிகாரிகளின் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

1200 சட்டைகளில் 515 சட்டைகளுக்கு உள்ளே சூடோஎப்ட்ரீன் என்ற 50 கிலோ போதைப்பொருளை வைத்து கடத்தப்பட இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக 3 பேர்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments