நில மோசடி புகார்- விசிக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது..!
ஈரோடு மாவட்டத்தில், நில மோசடி புகார் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2013ஆம் ஆண்டு புதூர் பகுதியை சேர்ந்த சுசீலா என்பவருக்கு, விசிக ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜாங்கம், 1200 சதுர அடி கொண்ட நிலத்தை 1 லட்சத்து 80ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த நிலையில், 2014 ஆம் ஆண்டு அதே நிலத்தை, வேறு ஒருவருக்கு, மனைகளை விற்பனை செய்யும் ஏஜென்டான மதிவாணன் மூலம் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சுசீலா அளித்த புகாரின் பேரில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார், ராஜாங்கம், மதிவாணன் ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Comments