உலகின் மிகப்பெரிய 146 அடி உயரமுள்ள முருகன் சிலை கும்பாபிஷேகத்திற்கு பின் திறக்கப்பட்டது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உலகின் மிகப்பெரிய முருகன் சிலை, கும்பாபிஷேகத்திற்கு பின் திறக்கப்பட்டது.
புத்திரகவுண்டன்பாளையத்தில் உலகிலேயே மிக உயரமான, 146 அடி உயர ஸ்ரீமுத்துமலை முருகன் சிலை 4 வருடங்களாக அமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், அதன் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
இதில், திருவாரூர் சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் மற்றும் ஆறுபடை முருகன் கோவில் குருக்கள் கலந்து கொண்ட நிலையில் மங்கள வாத்தியங்கள் முழங்க பல்வேறு ஊர்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் வைத்து பூஜை செய்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தின் போது ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவப்பட்ட நிலையில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்ட முருகனை வழிப்பட்டு சென்றனர்.
Comments