புதுச்சேரி குபேர் மீன் அங்காடியில் மீன்கள் இறக்க தடை.. எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்
புதுச்சேரி குபேர் மீன் அங்காடியில் மீன்கள் இறக்க தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி நகர பகுதியில் இயங்கி வரும் குபேர் மீன் அங்காடியால், ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதுச்சேரி அரசு கிழக்கு கடற்கரை பகுதியில் நவீன மீன் அங்காடியை அமைத்தது.
5 ஆண்டுகளாகியும் அந்த அங்காடிக்கு மீனவர்கள் செல்லாததால், குபேர் மீன் அங்காடியில் மீன்களை இறக்க இன்று முதல் அரசு தடை விதித்தது.
இந்நிலையில் அதிகாலையில் மீன்களை இறக்க வந்த வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் நேரு வீதி காந்தி வீதி சந்திப்பில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், போலீசார் பேச்சுவாரத்தை நடத்தி போராட்டத்தைக் கலைத்தனர்.
Comments