ஷாங்காயில் மக்கள் அனைவரும் மீண்டும் ஒரு முறை பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தல்
சீனாவின் ஷாங்காய் நகரில் மக்கள் அனைவரும் மீண்டும் ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் மேற்குப்பகுதியில் நேற்றுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு தொடரும் எனவும், நகரம் முழுவதும் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நகரத்தின் பல்வேறு குடியிருப்புப்பகுதிகளில் முகாம்களை அமைத்து கொரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், முகாம்கள் அமைக்கப்படாத பகுதிகளில் இருப்பவர்கள் தாங்களாகவே சுய பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் மக்களை கோபமடைய செய்துள்ள போதிலும், அறிகுறிகளுடன் கூடிய தொற்று பாதிப்பு எண்ணிக்கை கடந்த திங்கட்கிழமை 268 ஆக குறைந்தது.
Comments