சத்தியமங்கலம் புலிகள் சரணாலய வழக்கில் தீர்ப்பு.. "இலகுரக வாகனங்களுக்கு இரவு நேரத்தில் அனுமதி"
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் கோவை - பெங்களூரு சாலையில் 12 சக்கரங்களுக்கு மேல் உள்ள வாகனங்களும், 16.2 டன்னுக்கும் மேல் எடையுள்ள வாகனங்கள் எப்போதும் அனுமதி இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இது தொடர்பாக தாக்கலான மனுக்களை விசாரித்த நீதிபதிகள், அந்த சாலையில் அனுமதிக்கப்படும் வாகனங்கள் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது என்றும் இருமாநில பொது போக்குவரத்து வாகனங்களுக்கும், இரு சக்கர வாகனங்களுக்கும் காலை 6 மணி முதல் இரவு 9 வரை மட்டுமே அனுமதி என்றும் தீர்ப்பளித்தனர்.
பால் மற்றும் மருத்துவ பொருட்கள் எடுத்து செல்லும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கலாம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், சாலையில், ஒவ்வொரு 5 கிலோமீட்டர் தூரத்திற்கும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
மலை கிராம மக்களின் வாகனங்களை புகைப்படம் எடுத்து, பாஸ் வழங்கி அனுமதிக்கலாம் என்று தெரிவித்த நீதிபதிகள், வனவிலங்குகள் சாலையை எளிதாக கடக்கும் வகையில் மேல்மட்ட அல்லது கீழ்மட்ட பாலங்களை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
Comments