பிரதமர் இம்ரான் கான் காட்டிய மிரட்டல் கடிதம் அவருடைய வெளியுறவு அமைச்சக ஊழியர்களால் தயாரிக்கப்பட்டது - மரியாம் நவாஸ் கான்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காட்டிய மிரட்டல் கடிதம் அவருடைய வெளியுறவு அமைச்சக ஊழியர்களால் தயாரிக்கப்பட்டது என்று எதிர்க்கட்சித் தலைவரான மரியாம் நவாஸ் கான் தெரிவித்துள்ளார்.
தமது ஆட்சியைக் கவிழ்க்க வெளிநாட்டு சதி நடைபெறுவதாக குற்றம் சாட்டிய இம்ரான் கான் அதற்கு ஆதாரமாக கடிதம் இருப்பதாக தெரிவித்தார். ஆனால் அந்த கடிதத்தின் விவரங்களை ஏன் வெளியிடவில்லை என்று மரியம் கான் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏனென்றால் அப்படி ஒரு கடிதம் உண்மையில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.அந்த கடிதம் பற்றி இம்ரான் கான் பேசியதற்கு முன்பாக அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் பிரஸ்ஸல்ஸ் இடமாற்றம் செய்ய்பட்டதை சுட்டிக் காட்டிய மரியம் கான் அவரை பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் அழைத்து விசாரிக்க வேண்டும் என்றும் கூறினார்.
Comments