காதலிக்க மறுக்கும் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள்,பெண்களின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும் - நீதிபதி
காதலிக்க மறுக்கும் பெண்களின் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த மன்னார்குடியைச் சேர்ந்த பெண் ஒருவரை திருப்பூரைச் சேர்ந்த அரவிந்த்குமார் என்பவன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். காதலை ஏற்க மறுத்த அந்தப் பெண்ணை கத்தியால் குத்தித் தாக்கியவனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை நீதிபதி டி.எச்.முகமது பாரூக் விசாரித்தார். அரவிந்த்குமாருக்கு ஆயுள் தண்டனையும் 10 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
காதலிக்க மறுக்கும் பெண்கள் தாக்கப்படும் சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது என்று கூறிய நீதிபதி, அதுபோன்ற சம்பவங்கள் அவர்களது முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பதாகவும் கூறினார்.
Comments