ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் கண்டுடெடுக்கப்பட்ட நெல் உமிகள்
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில், நெல் உமிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் முதற்கட்டமாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் 3 இடங்களில் 32 குழிகள் தோண்டப்பட்டு கடந்த 7 மாதங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 60க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், குடுவைகள், இரும்பு பொருட்கள் என ஏராளமான தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன் கண்டெடுக்கப்பட்ட சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெரிய முதுமக்கள் தாழியில், நெல் உமிகள் இருந்தது தெரியவந்துள்ளது. இதன் மூலம் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் நெல் பயிரிட்டு விவசாயத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments