தஞ்சாவூரில் கடலில் மிதந்து வந்த ரூ.25 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்..!

0 1925

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே கடலில் மிதந்து வந்த 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ஏரிப்புறக்கரையைச் சேர்ந்த மீனவர் சோமசுந்தரம் சக மீனவர்களுடன் கடலில் சுமார் 7 நாட்டிக்கல் தூரத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது 5 மூட்டைகள் நீரில் மிதந்து வந்ததாக கூறப்படுகிறது. அதனை தனது படகில் ஏற்றுக்கொண்டு கரை திரும்பிய சோமசுந்தரம் இதுகுறித்து அதிராம்பட்டினம் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தார்.

அவர்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த நாகை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர், அந்த மூட்டைகளை சோதனையிட்டதில் அதில் சிறு சிறு பொட்டலங்களாக சுமார் 160 கிலோ எடையுள்ள கஞ்சா இருந்தது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments