மருத்துவமனையில் ஜெயலலிதா சுயநினைவில்லாமலேயே இருந்தார்.. ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் அப்பல்லோ மருத்துவர் வாக்குமூலம்

0 2396
மருத்துவமனையில் ஜெயலலிதா சுயநினைவில்லாமலேயே இருந்தார்.. ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் அப்பல்லோ மருத்துவர் வாக்குமூலம்

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சுயநினைவில்லாமல் இருந்ததாக, ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான அப்பல்லோ மருத்துவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம், மறு விசாரணைக்கு ஆஜராக அப்பல்லோ மருத்துவர்கள் 11 பேருக்கு சம்மன் அனுப்பியது.

அதன் படி மருத்துவர்கள் தவபழனி, செந்தில் குமார் ஆகியோர் இன்று ஆஜராகினர். சிகிச்சை வழங்கும் போது ஜெயலலிதா தனக்கு நன்றி தெரிவித்ததாக ஏற்கனவே எய்ம்ஸ் மருத்துவர் கிலானி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மருத்துவர் செந்தில்குமாரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதற்கு பதிலளித்த அவர், மருத்துவமனையில் ஜெயலலிதா சுயநினைவில்லாமலே இருந்ததாகவும், மருத்துவர் கிலானிக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்தது பற்றி தனக்கு தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments