பிற மாநில நகரங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் சொத்து வரி குறைவு.. அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
பெங்களூரு, கொச்சினை ஒப்பிடுகையில் தமிழக நகர்ப்புறங்களில் சொத்து வரி மிகவும் குறைவு என்றும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியே சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொருளாதார அடிப்படையில் 81.8 விழுக்காடு மக்களுக்கு சொத்து வரி உயர்வால் பாதிப்பில்லை என்றும் 1.47 விழுக்காடு குடியிருப்புகளுக்கு மட்டுமே 150 விழுக்காடு சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
Comments