வியாபாரிகளுக்கு கஞ்சா சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்ட ஆயுதப்படை காவலர் பணியிடை நீக்கம்
கோவையில் கஞ்சா வியாபாரிகளுக்கு கஞ்சா சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்ட ஆயுதப்படை காவலர் கணேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கஞ்சா விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கோவை ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வரும் கணேஷ்குமார், இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அறந்தாங்கியில் இருந்து வந்த தனிப்படை போலீசார், கோவை ஆயுதப்படை காவலர் கணேஷ்குமாரை கைது செய்தனர். அதன் காரணமாக கணேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார்.
Comments