நவ் சம்வத்தர் விழா கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய குழந்தையை பத்திரமாக மீட்ட காவலர்

0 2417
நவ் சம்வத்தர் விழா கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய குழந்தையை பத்திரமாக மீட்ட காவலர்

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த கலவரத்தில் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட நிலையில், அதில் சிக்கிய பச்சிளம் குழந்தையை காவலர் ஒருவர் பத்திரமாக காப்பாற்றினார்.

அம்மாநிலத்தின் கரவ்லி நகரில் இந்துக்களின் நவ் சம்வத்தர் விழா கொண்டாட்டத்தின் போது திடீரென ஏற்பட்ட மோதலில் மர்ம நபர்கள் கடைகள், வீடுகளுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது.

கொளுந்துவிட்டு எரியும் நெருப்புக்கிடைய குழந்தை அழும் ஓசையை கேட்ட நேத்ரேஷ் ஷர்மா என்ற காவலர், தாமதிக்காமல், ஓடி சென்று அந்த குழந்தையை காப்பாற்றினார்.

குழந்தையை காப்பாற்றி அவர் ஓடி வந்த படத்தை, காவல் அதிகாரி ஒருவர் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, நேத்ரேஷின் செயல் ராஜஸ்தான் காவல்துறையை பெருமைப்படுத்துவதாக குறிப்பிட்டார்.

அந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் பாராட்டுகளை தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments