பிரேத பரிசோதனைக்கு பிறகு மாற்றி வழங்கப்பட்ட சடலம்; கோவை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

0 2220

கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல்கள் மாற்றி வழங்கப்பட்டதால் இருத்தரப்பை சேர்ந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

பொம்மணம்பாளையத்தை சேர்ந்த மாதேஸ்வரன் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு மீண்டும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின் அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் மேற்கொண்ட போது அது மாதேஸ்வரனின் உடல் இல்லை என்பது தெரியவந்தது.

முன்னதாக விபத்தில் சிக்கிய மாதேஸ்வரனுக்கு வலது கையில் 3 விரல்கள் மட்டுமே இருந்த நிலையில் மருத்துவமனையில் வழங்கப்பட்ட உடலின் வலது கையில் 5 விரல்கள் இருந்ததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அந்த சடலத்துடன் மருத்துவமனைக்கு சென்று முற்றுகையிட்டனர்.

விசாரணையில் இவர்களுக்கு வழங்கப்பட்ட சடலம் ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் என்பதும், பிரேத பரிசோதனை கூடத்தில் இருந்து இவரது உடல் இலவச அமரர் ஊர்தியில் மாற்றி அனுப்பப்பட்டதும் தெரியவந்தது. அதன் பின் இருத்தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் உடல்கள் சரிபார்த்து, அவரவர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments