வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக வரும் 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், வரும் 6ஆம் தேதி உள்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை எனவும் வானம் மேகமூட்டத்துடன் மட்டும் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏப்ரல் 6ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் ஓர் மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும் என்றும் அதற்கடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Comments