ஐநா அமைப்புகள் கோவாக்ஸின் கொள்முதலுக்கு WHO தடை.!
கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்ஸினில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய 6 மாதங்கள் தேவைப்படலாம் என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐநா அமைப்புகளால் கோவாக்ஸின் கொள்முதல் செய்யப்படுவதை உலக சுகாதார அமைப்பு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. ஆனால் கோவாக்ஸின் பயனுள்ளது என்றும் பாதுகாப்பானது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், ஜிஎம்பி எனப்படும் குறியிடப்பட்ட நல்ல உற்பத்தி நடைமுறைகளை மேம்படுத்த 6 முதல் 8 மாதங்கள் ஆகலாம் என பாரத் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது. புதிய உபகரணங்களை வழங்குவதற்கு 15 முதல் 18 மாதங்கள் ஆகும் என்பதால், மருந்து தயாரிப்பதில் தாமதம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
Comments