கன்னியாகுமரியில் கல்லூரி வாகனம் மீது பொலீரோ ஜீப் நேருக்கு நேர் மோதும் சிசிடிவி காட்சிகள்.!

0 2780

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் கல்லூரி வாகனம் மீது பொலீரோ ஜீப் ஒன்று நேருக்கு நேர் மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

தொலையாவட்டம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி வாகனம் ஒன்று நேற்று மாலை மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு சென்றது.

மாத்திரவிளை அருகே அந்த வாகனம் சென்ற போது எதிரே வந்த பொலிரோ ஜீப் ஒன்று அதிவேகமாக மோதியது. இந்த சம்பவத்தில் இரண்டு வாகனங்களின் முன்பக்கம் உடைந்து பலத்த சேதம் அடைந்தது.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments