பார்வை குறைபாடு உள்ளவர்கள் பயன்படுத்தக்கூடிய சென்சார் பொருத்திய ஷுவை அசாமை சேர்ந்த சிறுவன் உருவாக்கி சாதனை.!
பார்வை குறைபாடு உள்ளவர்கள் பயன்படுத்தக்கூடிய வகையிலான சென்சார் பொருத்திய ஷுவை அசாமை சேர்ந்த சிறுவன் உருவாக்கி உள்ளான். கரிம்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த அன்குரித் கர்மாகர் என்ற சிறுவன் கண் பார்வையற்றவர்கள் பயன்படுத்தக் கூடிய பிரத்யேக ஷுவை வடிவமைத்துள்ளான்.
பார்வை குறைபாடு உடையவர் இந்த ஷூவை அணிந்து செல்லும் போது, எதிர்வரும் தடைகளை ஷூவில் பொருத்தி உள்ள சென்சார் கண்டறிந்து அதிக சத்தத்துடன் அந்த நபருக்கு சமிக்கை செய்யும் என சிறுவன் தெரிவித்துள்ளான்.
9ஆம் வகுப்பு படிக்கும் அன்குரித் வருங்காலத்தில் சிறந்த விஞ்ஞானியாக உருவாக வேண்டும் என ஆசை கொண்டுள்ளான்.
Comments