ஹைதராபாத்தில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் அமைந்துள்ள பப்பின் உரிமம் ரத்து

0 1915

ஹைதராபாத்தில் உள்ள ராடிசன் ப்ளூ என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அமைந்துள்ள பப் புட்டிங்  அண்ட் மிங்க் என்ற மதுபான விடுதியின் உரிமத்தை தெலுங்கானா அரசு ரத்து செய்தது.

பார் மற்றும் உணவக வழிகாட்டுதல்களை மீறியதற்காக மதுபான விடுதியின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஹைதராபாத் கலால் கண்காணிப்பாளர் சீனிவாச ராவ் தெரிவித்தார்.

பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள  5 நட்சத்திர ஓட்டலில் போதை மருந்துகளுடன் உல்லாசப் பார்ட்டி நடத்திய பிரபல தெலுங்கு நடிகரின் மகள் உள்பட பலரை போலீசார் கைது செய்தனர். கோகய்ன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments