உலக மக்கள் தொகையில் 99 விழுக்காடு பேர் தரமற்ற காற்றை சுவாசிக்கின்றனர் - உலக சுகாதார அமைப்பு
உலக மக்கள் தொகையில் 99 விழுக்காடு மக்கள் தரமற்ற காற்றினை சுவாசிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், மோசமான காற்றுநுரையீரலுக்குள் ஆழமாக ஊடுருவி, நரம்புகள் மற்றும் தமனிகளுக்குள் நுழைந்து, நோயை உண்டாக்கக்கூடிய துகள்களால் பெரும்பாலும் நிறைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
கிழக்கு மத்தியதரைக் கடல் மற்றும் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் காற்றின் தரம் மோசமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்களைப் பயன்படுத்துதல், புதைபடிவ எரிபொருட்களிலிருந்து விலகிச் செல்வது, பசுமை ஆற்றலைப் பெருமளவில் அதிகரிப்பது போன்ற காரணிகளால் காற்று மாசுவைக் குறைக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
Comments