பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக முன்னாள் தலைமை நீதிபதியை நியமிக்க அதிபருக்கு இம்ரான் கான் பரிந்துரை.!
பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக முன்னாள் தலைமை நீதிபதி குல்சர் அஹமத் என்பவரை நியமிக்க அதிபர் ஆரிப் ஆல்விக்கு இம்ரான் கான் பரிந்துரை செய்துள்ளார்.
இதுகுறித்த தகவலை இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவர் பாவத் ஹுசைன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் குறித்து எதிர்கட்சிகள் தொடர்ந்த வழக்கை இன்று மீண்டும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது.
இதனிடையே புதிய அரசு பாகிஸ்தானில் உதயமாகும் வரை அனைத்து வித உதவிகளையும் வழங்கத் தயார் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்து உள்ளது.
Comments