"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு 2022-2023 நிதியாண்டில் ரூ.2,285 கோடி ஒதுக்கீடு - மத்திய அரசு
சென்ட்ரல் விஸ்டா எனப்படும் புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகளுக்கு நடப்பு நிதியாண்டில் 2 ஆயிரத்து 285 கோடி ரூபாய் செலவழிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநிலங்களவையில் பேசிய வீட்டு வசதித்துறை அமைச்சர் கவுஷல் கிஷோர், சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் செலவு 29 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் கருத்தை மறுத்தார்.
மேலும் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரை செல்லும் ராஜபாதையை உள்ளடக்கிய, மறுவடிவமைக்கப்பட்ட சென்ட்ரல் விஸ்டா அவென்யூவின் முதல் கட்டப் பணிகளை, வருகிற மே மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கவுஷல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
Comments