உக்ரைனில் ரஷ்யா இனப்படுகொலை நிகழ்த்தியுள்ளது - உக்ரைன் அதிபர்
உக்ரைனில் ரஷ்யா இனப்படுகொலை நிகழ்த்தியுள்ளதாகவும், ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தை என்பது கடினமான ஒன்றாகும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில், உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் கீவ் அருகே உள்ள புச்சா நகரத்தில் புதைக்குழியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், மக்களை வெளியேற்றுவதற்கு முன்னதாக அவர்களை சித்ரவதை செய்து ரஷ்யப் படையினர் கொன்றுள்ளதாகவும் உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
புச்சாவில் ரஷ்யப் படைகள் படுகொலை நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ள நிலையில், ரஷ்யா குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
Comments