குஜராத்தைத் தொடர்ந்து இமாச்சலப் பிரதேசத்திலும் பாடத்திட்டத்தில் பகவத் கீதை
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் 9ம் வகுப்பு முதல் பகவத் கீதை பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தர்ராங் தொகுதியில் பேசிய கல்வி அமைச்சர் கோவிந்த் சிங் தாக்கூர், 9ம் வகுப்பு முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பகவத் கீதை கற்பிக்கப்படும் என்று முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் கூறியதை நினைவுபடுத்தினார்.
இதன்மூலம் குஜராத்தை அடுத்து பகவத் கீதையை பள்ளி பாடத் திட்டத்தில் சேர்க்கும் இரண்டாவது மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் உருவாகும் என்றும் கோவிந்த் சிங் தாக்கூர் குறிப்பிட்டார்.
Comments