5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒமிக்ரான் பாதிப்பு குறைவு எனத் தகவல்

0 1942

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டெல்டா பாதிப்பை விட ஒமிக்ரான் பாதிப்பு குறைவாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், டெல்டா மாறுபாட்டை விட

ஓமிக்ரான் மாறுபாடு 6 முதல் 8 மடங்கு அதிக தொற்றுநோயைக் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. ஒமிக்ரானால் அதிக குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், டெல்டா பாதிப்பை விட குறைந்த பாதிப்பைக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இன்னும் கொரோனா தடுப்பூசிக்கு தகுதி பெறாததால் பாதிப்பு அதிகம் இருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments