நாமக்கல்லில் அரசு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் அகற்றம்.. இடிக்கப்பட்ட இடத்தை பரிதாபத்துடன் சுற்றி, சுற்றி வந்த வளர்ப்பு நாய்.!
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் கட்டப்பட இருந்த இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் இடிக்கப்பட்டன.
சின்னார்பாளையத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசுக்கு சொந்தமான நிலத்தில் 2 குடும்பங்கள் விவசாயம் செய்தபடி, வீடு கட்டி வசித்து வந்தனர்.
வருவாய் துறை சார்பில் பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்ட போதும் அவர்கள் வீடுகளை காலி செய்யாததால், போலீசார் முன்னிலையில் ஜேசிபி எந்திரங்கள் மூலம் வீடுகள் இடிக்கப்பட்டன.
அங்கு குடியிருந்தவர்கள் வளர்த்த நாய் ஒன்று, வீடு இடிக்கப்பட்ட இடத்தை சுற்றி சுற்றி வந்தது காண்போரிடத்தில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
Comments