தொழிலதிபரும், பாமக நிர்வாகியுமான சாம் பாகார் கண்ணாடியை உடைத்த இளம் பெண் கைது..!
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரும், பாமக நிர்வாகியுமான சாம் பாலுக்கு சொந்தமான விலை உயர்ந்த காரின் கண்ணாடியை உடைத்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள சாம் பாலின் விருந்தினர் இல்லத்துக்கு ஆட்டோவில் வந்த இளம் பெண் ஒருவர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த விலை உயர்ந்த 2 கார்களின் கண்ணாடியை அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது.
பிரியங்கா என்ற அந்த பெண் சென்னை கீழ்பாக்கத்தில் தனக்கு சொந்தமான அழகு நிலையத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் பணியாற்றியதாகவும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் சாம் பால் போலீசில் தெரிவித்துள்ளார்.
அந்தப் பெண்ணை கைது செய்த போலீசார், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா அல்லது ஏதேனும் முன் விரோதத்தால் அப்படி செய்தாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Comments