வாட்டி வதைக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க வண்டலூர் பூங்காவில் விலங்குகளுக்கு ஷவர் குளியல்
வாட்டி வதைக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்கு ஷவர் குளியல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், பறவைகள், விலங்குகள் உள்ளிட்டவை கோடைகாலத்தை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி, உயிரினங்களுக்கு போதுமான தண்ணீர் வழங்கப்படுவதுடன், நிழல் வலை அமைக்கப்பட்டுள்ளது.
காண்டாமிருகம், யானை, நீர்யானை போன்ற விலங்குகளுக்கு தண்ணீர் மழை மற்றும் தெளிப்பான்கள் மூலம் குளிர்விக்கப்படுகிறது. மேலும், பார்வையாளர்களுக்கும் சிறியகுழாய்கள் மூலம் தண்ணீரை சாரல் போல் தெளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Comments