சாலையில் சென்ற கார் டயர் வெடித்து நிலை தடுமாறியதில் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ; கணவன், மனைவி உயிரிழப்பு

0 2127
கார் டயர் வெடித்து நிலை தடுமாறியதில் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த காரின் டயர் திடீரென வெடித்து நிலை தடுமாறியதில் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதி கணவன் - மனைவி உயிரிழந்தனர்.

சிறுவரப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் - விஜயா தம்பதி தங்களது மகனின் திருமண அழைப்பிதழை கொடுக்க இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

ஆதிவராகநத்தம் என்ற இடத்தின் அருகே வந்தபோது, எதிரே அதிவேகமாக வந்து கொண்டிருந்த கார் ஒன்று அதன் பின்பக்க டயர் வெடித்து நிலை தடுமாறி இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே தம்பதி உயிரிழந்தனர். இருசக்கர வாகனம் சுக்குநூறான நிலையில், கார் சாலையோரம் இருந்த நீலகிரி தோப்புக்குள் பாய்ந்தது. காரின் முன்பகுதியும் கடும் சேதமடைந்த நிலையில், அதில் வந்தவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments