ககன்யான் திட்டத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள முதல் தொகுதிக் கருவிகளை இஸ்ரோவிடம் ஒப்படைத்தது இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம்
ககன்யான் திட்டத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள முதல் தொகுதிக் கருவிகளை இஸ்ரோவிடம் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் ஒப்படைத்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ, 2023ஆம் ஆண்டில் விண்கலத்தின் மூலம் விண்வெளிக்கு 3 வீரர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது.
ககன்யான் எனப்படும் இந்தத் திட்டத்துக்குத் தேவையான விண்கலம் மற்றும் கருவிகளைப் பெங்களூரைச் சேர்ந்த அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
அவ்வாறு தயாரித்துள்ள முதல் தொகுதிக் கருவிகளை எச்ஏஎல் அதிகாரிகள் இஸ்ரோ அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைத்தனர்.
Comments