முன்னாள் மனைவி மோனிகாவுக்கு எதிராக இசையமைப்பாளர் டி.இமான் வழக்கு

0 8381

தனது குழந்தைகளின் பாஸ்போர்ட்டுகள் காணாமல் போய்விட்டதாக பொய்யான தகவல் கூறி புதிய பாஸ்போர்ட்டுகள் பெற்றதாக முன்னாள் மனைவி மீது இசையமைப்பாளர் டி.இமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018ம் ஆண்டு மனைவி மோனிகாவிடமிருந்து விவாகரத்து பெற்ற இசையமைப்பாளர் இமானுக்கு, குழந்தைகளை சந்திக்க குடும்பநல நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில், தனது இரு குழந்தைகளின் பாஸ்போர்ட்டுகளும் தன்னிடம் இருக்கையில், அவை காணாமல் போய்விட்டதாக தவறான தகவல் கொடுத்து, குழந்தைகளுக்குப் புதிய பாஸ்போர்ட்டுகளை மோனிகா பெற்றிருப்பதாக இமான் குற்றம்சாட்டுகிறார்.

குழந்தைகளை சந்திக்க விடாமல் செய்யும் வகையில், அவர்களை வெளிநாடு அனுப்புவதற்காக புதிய பாஸ்போர்ட் பெற்றுள்ளதாகவும் இமான் தனது மனுவில் கூறியுள்ளார்.

மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், தலைமை பாஸ்போர்ட் அதிகாரி, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி, மோனிகா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 9ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments