கொதிக்கும் பானிபூரி குருமாவுக்குள் தவறி விழுந்த 2 வயது சிறுவன் உயிரிழப்பு

0 2607
கொதிக்கும் பானிபூரி குருமாவுக்குள் தவறி விழுந்த 2 வயது சிறுவன் உயிரிழப்பு

கும்பகோணம் அருகே அடுப்பிலிருந்து கொதிக்கக் கொதிக்க இறக்கி வைக்கப்பட்டிருந்த பானிபூரி குருமாவுக்குள் தவறி விழுந்து 2 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செட்டிமண்டபம், ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர்கள் முருகேசன் - அனுசுயா தம்பதி. முருகேசன் கோவையிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் நிலையில், அனுசுயா வீட்டிலேயே பானிபூரி கடை வைத்து நடத்தி வருகிறார்.

பானிபூரியுடன் கலக்கப்படும் குருமாவை அகலமான பாத்திரம் ஒன்றில் அவர் தயார் செய்வது வழக்கம். கடந்த மாதம் 27ஆம் தேதி வழக்கம்போல் குருமா தயார் செய்த அனுசுயா, கொதிக்கும் குருமாவுடன் பாத்திரத்தை இறக்கி கீழே வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.

அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த அவரது 2 வயது மகன் ரிஷி கால் இடறி குருமா நிரம்பிய பாத்திரத்துக்குள் விழுந்தான் என்று கூறப்படுகிறது. தஞ்சை அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு வார காலமாக சிகிச்சை பெற்று வந்த குழந்தை ரிஷி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தான்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments