மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, மாணவர் விடுதி 2 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் - மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர்

0 2044
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, மாணவர் விடுதி 2 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகள் செய்யப்படும் என்றும், கல்லூரி, மாணவர் விடுதி கட்டும் பணிகள் இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் என்றும் அதன் இயக்குநர் அனுமந்த ராவ் தெரிவித்துள்ளார்.

இராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை மாவட்டம் தோப்பூரில் 200 ஏக்கர் பரப்பில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகள் செய்யப்படும் என்றும், புற்று நோய்க்குச் சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, மாணவர் விடுதிக் கட்டடங்கள் கட்டி முடிக்க இரண்டு ஆண்டுகள் ஆகும் என்றும் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments