தமிழகத்தில் 97.05 சதவிகித அளவுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
தமிழகத்தில் 4 ஆயிரத்து 805 கோடி ரூபாய் அளவில் 97 சதவீதம் நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு வங்கிகளில் பெற்ற ஐந்து சவரனுக்குட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில், கடந்த ஒரு வாரமாக தகுதியான நபர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தற்போது வரை தகுதியுள்ள 12 லட்சத்து 19 ஆயிரம் பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதே போல், பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பயிர் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக அவர் கூறினார்.
Comments