ஆட்டோக்களுக்கான புதுப்பிக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்

0 1559
ஆட்டோக்களுக்கான புதுப்பிக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்

புதுச்சேரியில் ஆட்டோக்களுக்கான FC கட்டணம் எனப்படும் புதுப்பிக்கும் தொகை உயர்த்தப்பட்டதை கண்டித்து, ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி போக்குவரத்து துறை சார்பில் ஆண்டுதோறும் வசூலிக்கப்பட்டு வந்த ஆட்டோக்களுக்கான புதுப்பிக்கும் தொகை, 700 ரூபாயில் இருந்து 4,600 ரூபாயாக ஆக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலியார்பேட்டை பகுதியில் உள்ள போக்குவரத்து துறை அலுவலகம் முன் சாலையின் இரு புறங்களிலும் ஆட்டோக்களை நிறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் ஆட்டோக்களை அப்புறப்படுத்த வந்த காவல்துறையினருக்கும், ஓட்டுநர்களும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments