'அனைவரும் தங்களால் இயன்ற வகையில் உக்ரைனுக்கு உதவி செய்யுங்கள்' கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் ஒளிபரப்பப்பட்ட உக்ரைன் அதிபரின் வீடியோ

0 2084

அமெரிக்காவில் நடைபெற்ற கிராமி விருதுகள் வழங்கும் விழாவின் போது ஒளிபரப்பப்பட்ட வீடியோ ஒன்றில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அனைவரும் தங்களால் இயன்ற வகையில் உக்ரைனுக்கு உதவி செய்யுங்கள் என கோரிக்கை விடுத்தார்.

சர்வதேச அளவில் இசைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் ஞாயிற்றுக்கிழமை கிராமி விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன. இந்த விருது விழா நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த இசை ஜாம்பவான்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது ஒளிபரப்பப்பட்ட வீடியோவில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இசைக்கு நேர் மாறானது, போரால் சிதிலமடைந்திருக்கும் நகரங்களும், உயிரிழந்த பொதுமக்களின் அமைதியும் தான் என உருக்கமாக கூறினார்.

அந்த அமைதியை உங்கள் இசையால் நிரப்புங்கள், இன்றே நிரப்புங்கள், அதில் எங்கள் கதையை கூறுங்கள் என கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments